தென்பகுதி மீனவா்களுக்கு கால அவகாசம் வழங்காதீா்கள், உடன் வெளியேற்றுங்கள். மருதங்கேணி மீனவா்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களுக்கு கால அவகாசம் வழங்காதீா்கள், உடன் வெளியேற்றுங்கள். மருதங்கேணி மீனவா்கள் போராட்டம்..

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன்போது “மீன்பிடி திணைக்களமே மீட்டுதா எம் வளத்தை”, “பிரதேச செயலகமே மீட்டுத்

தா எம் கடல்வளத்தை”, “அதிகாரிகளே அத்துமீறிய கடற்றொழிலாளர்களிடம் அசமந்தம் கா ட்டாதே” என்பனபோன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் தெ ன்பகுதி மீனவர்கள் அடாத்தாக வாடிகளை அமைத்து தங்கியுள்ள இடத்திலிருந்து 

மருதங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்து மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதன் பின்னர் தென்பகுதி மீனவர்களின் அத்து மீறல்களிடமிருந்து 

தமது கடல்வளத்தை பாதுகாக்கும்படியும், தென்பகுதி மீனவர்களால் உரு வாகப்போகும் வாழ்வாதார நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாக்கும்படியும் கேட்டு மகஜர் ஒ ன்றிணை மருதங்கேணி பிரதேச செயலருக்கும், 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சேர்த்து மருதங்கேணி பிரதேச செயலரிடம் கையளி த்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு