இராணுவமே வெளியேறு என கூறும் முதலமைச்சர் இராணுவத்துடன் இணைந்து மரம் நடுவது வேடிக்கை..
தமிழ் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு படையினர் தடையாக உள்ளதாகவும், படையினர் வெளியேற்றப்படவேண்டும் எனவுடம் மேடைக்கு மேடை கூறிக்கொண்டிருக்கும் வடமாகாண முதலமைச்சர் படையினருடன் இணைந்து மரநடுகை திட்டத்தை தொடக்கிவைத்தமை என்ன அடிப்படையில் என வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் வடமாகாணத்தின் அபிவிருத்தி குறித்த பிரதமரின் கலந்துரையா டல் ஆகியவற்றில் கலந்து கொள்ளாமல் தவிர்திருந்த நிலையில், நேற்றய தினம் இராணுவத்தினருடன் இணைந்து மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
இது மாகாணசபை உறுப்பினர்கள் மட்டத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பலத்த விமர்சனங்களை உண்டாக்கியுள் ளது. இது குறித்து கருத்து கேட்டபோதே எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இ ராணுவத்தினருடன் இணைந்து மரநடுகை திட்டத்தை தொடக்கிவைத்தமையை ஒரு பாரிய தவறாக சித்தரிப்பதற்கு நான் நினைக்கவில்லை.
நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன் ஆனால் நாங்கள் அரசுடன் இணைந்தே மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ளவேண்டும். மக்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ளவேண்டும். என கூறிக்கொண்டு மக்கள் ஆணை யை பெற்றவர்கள். ஆனால் முதலமைச்சர் இராணுவத்தை வெளியேற்றுவேன்.
என கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர். மக்களுடைய ஆணையை பெற்றவர். இன்றும் கூட படையினர் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு தடையாக உள்ளார்கள் எனவும், படையினர் வெளியேற் றப்படவேண்டும் எனவும் மேடைக்கு மேடை மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அ வர் மேடையில் மக்களுக்கு கூறுவதும், நடைமுறையில் நடந்து கொள்ளும் விதமும் முரண்பட்டதாக உள்ளதையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
இதனையே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா செய்தால் அவர் துரோகி முதலமைச்சர் செய்தால் அவர் கடவுள் அல்லது தியாகி என பார்க்கலாமா? இதனை விட வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பை கே ள்விக்குள்ளாக்கும் விடயமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மாறியுள்ளன. இது குறித்து
கடந்த மாதம் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார்கள். பின்னர் திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்ப தற்கான வழிவகைகள் குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூடி ஆ ராய்ந்தார்கள். இந்த இரு நிகழ்வுக்கும் முதலமைச்சர் வரவில்லை.
இதனை விட கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்தின் அபிவிருத்தி நிலமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
அதனையும் முதலமைச்சர் புறக்கணித்தார். ஆகவே மக்களுடைய நலன்களுக்காக மக் களின் அடிப்படை தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பான்மையின அரசியல்வாதி
களுடன் நிற்க முடியாத அல்லது அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத முதல மைச்சர் படையினரை வெளியேற்றுவோம் எனவும், வெளியேற்றுங்கள் எனவும் கூறிக்கொண்டு அதே படையினருடன் இணைந்து மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தால் முதல மைச்சர் யார்? துரோகியா? தியாகியா? என எதிர்கட்சி தலைவர் மேலும் கேள்வி எழுப்பினார்.