SuperTopAds

வடமாகாணத்தில் போருக்கு பின்னர் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் போருக்கு பின்னர் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளது..

வடமகாணத்தில் போருக்கு பின்னரான 9 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள தாக கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ம ட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட் டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்குள்ளாக்கப்பட்டமை  அம்பலமாவதாகவும் கூறினார்.

மேற்படி விடயம் தொடர்பாக ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகைளில், வடமாகாணத்தி ல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். மறுபக்கம் பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் திட்டமி ட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு  வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வ

டுமாகாணத்தில் 131 விகாரைகள் போருக்கு பின்னரான 9 வருடங்களில் அமைக்கப்பட்டிருக்கி ன்றது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகா ரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

இதன் ஊடாக முல்லைத்தீவு மன்றும் வவுனியா மாவட்டங்களில் போருக்கு பின்னர் திட்டமிட்டவகை யில் தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது மட்டும ல்லாது. துpட்டமிட்டவகையில் பௌத்தர்களே வாழாத பகுதியில் பௌத்த விகாரைகளும் கட்ட ப்பட்டுக் கொண்டிருப்பதை காட்டுகின்றது. இது குறித்து தமிழ் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது குறித்து மக்களே பல இடங்களில் எமக்கு கூறியுள்ளார்கள். 

இனிமேலாவது வ டமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதுடன் சேர்த்து பௌத்தமயமாக்கலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது கட்டாயமாகும் என ரவிகரன் மேலும் கூறியிருக்கின்றார்.