இராணுவத்துடன் இணைந்து மரநடுகை ஒழுங்கு செய்தது நானல்ல. யாழ்.மாநகர மேயரே..
இராணுவத்துடன் இணைந்து மரநடுகை தி ட்டத்தை நாம் செய்யவில்லை என கூறியி ருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வர ன் யாழ்.மாநகரசபை முதல்வரே இராணுவத்துடன் இணைந்து மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார். அதனை புறக்கணிப்பது எம து மக்களுக்கே பாதிப்பு அதனாலேயே மர நடுகை திட்டத்தில் கலந்துகொண்டேன்.
மேற்கண்டவாறு முதலமைச்சர் சீ.வி.விக் னேஷ்வரன் கூறியுள்ளார். இன்று மதியம் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே முதல மைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அடுத்த மாகாணசபை தேர்தல் தொடர்பாக..
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன்.
சிங்கள குடியேற்றம் குறித்த கூட்டத்தில் க லந்து கொள்ளாமை குறித்து..
அக் கூட்டத்திற்கு கடைசி வரை நான் போவதாக இருந்தேன். ஆனால் எனது தனிபட்ட காரணங்களுக்காக என்னால் அங்கு செல்ல முடிநவில்லை. எனினும் அது தொடர்பாக அவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதாவது நீங்கள் முடிவுகளை எடுங்கள் அவற்றிக்கு செயல் வடிவம் கொடுக்கும் போது நான் முதலமைச்சர் என்ற வகையில் அனைத்தையும் செய்வேன் என குறிப்பிட்டிருந்தேன்.
இராணுவம் ஒழுங்கமைத்த நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பாக..
அது வடக்கு மாகாண ஆளுநர் யாழ். மாநகர சபை மேயர் இராணுவத்தோடு சேர்ந்து இந் நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர். இந்த நேரத்தில் அதனை புறக்கணித்தால் அது எங்கள் மக்களை தான் தாக்கும்.
மேலும் எல்லா விடயங்களையும் நாம் அரசியல் ரீதியாக பார்க்க கூட்டாது. எமக்கு வருகின்ற நன்மைகளையும் நாம் பார்க்க வேண்டும். அத்தோடு இராணுவமே மரங்களை வெட்டியது. எனவே அவர்களே அதனை நாட்டி தரட்டும்.
எனினும் இவ் செயற்திட்டமானது என்னிடம் பேசப்பட்டு எங்களூடாக செய்யப்பட்டிருந்தால் நான் நிச்சயம் இதற்கு இடம்கொடுத்திருக்க மாட்டேன்.
புதிய கட்சி தொடர்பாக..
நானும் அவ்வாறு தான் கேள்விப்பட்டேன். அந்தளவே எனக்கும் தெரியும். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக..
பேரவை சார்பில் ஒருவரையும் நியமிக்க மாட்டோம். ஆனால் பேரவையின் அனுசரனையில் யாராவது முதலமைச்சர் வேட்பாளராக வரக்கூடும்.
புதிய கட்சி தொடர்பான முன்னேற்றம் குறித்து..
முன்னேற்றம் ஒன்று நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லை.
அடுத்த தேர்தலில் கூட்டமைப்புடனான உறவு குறித்து..
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது அதற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் தெரியும். எனவே அது அது அந்தந்த நேரத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடியாது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் என்றார்.