SuperTopAds

போரில் பின்வாங்கும் ரஷ்யா!! -உக்ரைன் கேர்சன் நகரில் இருந்து வெளியேற படைகளுக்கு உத்தரவு-

ஆசிரியர் - Editor II
போரில் பின்வாங்கும் ரஷ்யா!! -உக்ரைன் கேர்சன் நகரில் இருந்து வெளியேற படைகளுக்கு உத்தரவு-

ரஷ்யா படைகள் கைப்பற்றி தம்வசம் வைத்துள்ள உக்ரைன் நாட்டின் கேர்சன் நகரிலிருந்து வாபஸ் பெறுமாறு ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கேர்சனிலிருந்து படைகளை வெளியேற்ற ஆரம்பியுங்கள் என உக்ரைனிலுள்ள ரஷ்ய படைத் தளதபதி சேர்ஜி சுரோவிகினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார். 

கேர்சன் நகரானது கேர்சன் பிராந்தியத்தின் தலைநகராகும். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா கைப்பற்றிய முதலாவது மாநகரம் இதுவாகும். பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படையெடுப்பு ஆரம்பாகிய பின் இதுவரை ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரேயொரு பிராந்திய தலைநகராவும் இது இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த உக்ரைனிய அதிகாரிகள், முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரிலிருந்து சண்டை எதுவுமின்றி ரஷ்ய படைகள் வெளியேற வாய்ப்பில்லை எனத் தெரிவித்தனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கையில், போர்க்களத்தில் ரஷ்யா எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஓர் ஆதாரமாக இந்த வாபஸ் அறிவிப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.