வடமாகாண கல்வி நிா்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகாித்துள்ளது, இலங்கை ஆசிாியா் சங்கம் குற்றச்சாட்டு..
வடமாகாண கல்வி நிா்வாகத்திலும், பாடசாலைகளிலும் அரசியல்வாதிகளினதும், கல்வி அதிகாாிகள் சிலாினது ம் சட்டத்திற்கு மாறான தலையீடுகள் அதிகாித்துள்ளமையினால் வடமாகாணத்தில் கல்வி சமூகத்தை நம்பிக்கை இழக்க வைத்துள்ளதாக இலங்கை ஆசிாியா் சங்க பொது செயலாளா் ஜோசப் ஸ்ராலின் கூறியுள்ளாா்.
மேற்படி விடயம் தொடா்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா் இது தொடா்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
வடமாகாணத்தில் கல்வி வலயங்களினதும் பாடசாலைகளினதும் நிர்வாகக் கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் வகையில் அரசியல்வாதிகளாலும் ஒருசில கல்வி அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் வடமாகாணத்தில் தலைதூக்கியுள்ளது.
இது வடமாகாணத்தின் கல்வி நிர்வாகக் கட்டமைப்புக்களையும் தாபன விதிகளையும் மீறி செயற்படும் முறையற்ற நிலைக்கு சென்றுள்ளது.
இதை கவனிக்கவேண்டிய தலைமைகளும் பொறுப்பற்று செயற்பட்டு தமது அரசியல் இருப்பை பலப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு செயற்படுவது கல்வி சமூகத்தை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது.
அரசியல்பிரமுகர்களின் பிரத்தியேக செயலர்களால் இடமாற்றம் வழங்குவதும் அதிபர்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்த முயல்வதும் பிரதேச நலன் எனக் கூறிக்கொண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களைக் கவனிப்பதுமாக வடமாகாணத்தின் கல்விக்கட்டமைப்பு முழுவதுமாக அரசியல்மயமாகிவருவது ஆபத்தானதாகும்.
இதனை தெரியப்படுத்தியும் முறைகேட்டின் தார்ப்பரியம் உணராத அரசியல் வாதிகளின் அசமந்தம் மிகமிக ஆபத்தானதாகும். சில கல்வி வலயங்களில் ஓய்வுபெற்ற கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் வடமாகாண கல்வியமைச்சு நியமித்துள்ளது.
பிரச்சினைகள் ஏற்படும்போது சட்ட ரீதியாக பொறுப்புக்கூற அவசியமற்ற இவ்வாறானவர்கள் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் கட்டுப்படாதவர்களாக கல்வி வலயங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். தமது தனிநபர் நலன்களுக்காக குறித்த பிரதேசத்தின் கல்வியை சீர்குலைக்க முயல்வதும் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடமாகாணத்தில் போதிய கல்விநிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளநிலையில் ஒப்பந்த உத்தியோகத்தர்களின் ஒப்பந்தங்களும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
வடமாகாணத்தின் கல்விகட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை நிவர்த்திசெய்ய சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.