285 வெற்றிடங்களுக்கு 196 பேர் நியமனம் 89 வெற்றிடம் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
285 வெற்றிடங்களுக்கு 196 பேர் நியமனம் 89 வெற்றிடம் தொடர்கிறது..

வடக்கு மாகாணத்தில்  285 கிராம சேவகர்களிற்கு வெற்றிடம் உள்ளபோதும் தற்போது 196  கிராம சேவகர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் 89 கிராம சேவகர்களின் பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிராம சேவகர்கள் வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கமை 2017ம் ஆண்டில் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றிருந்தது.  இருப்பினும் அவர்களிற்கான நேர்முகத் தேர்வு நீண்டகாலமாகவே இழுபட்ட நிலையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. 

இதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டத்திலும் தற்போது 285 கிராம சேவகர்களிற்கான பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில் 196பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன் பிரகாரம்  யாழ்ப்பாண மாவட்டத்தில் 99 கிராம சேவகர்களிற்கு வெற்றிடங்கள் உள்ள நிலையில் 77 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 42 கிராம சேவகர்களிற்கான இடம் வெற்றிடமாகவுள்ள நிலையில் 28 பேருக்கு மட்டுமே நியமனம்  கிடைத்துள்ளது. 

இவ்வாறே  முல்லைத்தீவு மாவட்டத்தில்  74 வெற்றிடங்கள் உள்ள நிலையில் தற்போது  43 பேரிற்கு நியமனம் கிடைத்துள்ளது. இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் தற்போது  44 கிராம சேவகர்கள் வெற்றிடம் உள்ளபோதும்  30பேர் மட்டுமே  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில்  26 வெற்றிடங்கள்  உள்ளபோதும் 18  பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தற்போது 285 கிராம சேவகர்கள் வெற்றிடத்திற்காக 196பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டமையானது 2017ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பெறப்பட்ட ஆளணி வெற்றிடத்திற்கான நியமன அனுமதிக்கமையவே இந்த ஏற்பாடு இடம்பெற்றதாகவும் 

அதற்கு பின்னரான வெற்றிடத்திற்கு விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி கிடைத்தால் முழுமையான வெற்றிடத்திற்குரிய நியமனம் வழங்கப்படும். என அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு