மகாவலி அதிகாரசபையின் சிங்கள குடியேற்றங்களின் பின்னால் பாரிய திட்டம் உள்ளது..

ஆசிரியர் - Editor I
மகாவலி அதிகாரசபையின் சிங்கள குடியேற்றங்களின் பின்னால் பாரிய திட்டம் உள்ளது..

மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற் கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மறுத்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக ப றிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4 ம் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் 

நேரில் சென்று பார்வையிட்டி ருந்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம்  எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகா ணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது பேசிய மாகாணச எதிர்கட்சி தலைவர் சி.தவராசா 

திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு த் தீர்வினை காணவேண்டும். அதாவது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் ஒன் றை கொண்டுவந்தாலே போதுமானது. இங்கு பேசப்படும் பெரும்பாலான பிரச்சினைகள் 

தீர்க்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றில் 50 வீத ஆதரவு தேவை. அதனை சிங்களவர்கள் தருவார்களா? என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா நீங்கள் அரசுக் கு ஆதரவு கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தரமாட்டார்களா? என கேள்வி எழுப்பினார். தொடர் ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறுகையில், இன்றைக்கு நாடாளுமன்ற

த்தில் பெரும்பான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நடந்து கொள்ளும் வி தத்தை பார்த்தால் அவர்கள் ஆதரவு தரமாட்டார்கள். ஆகவே 50 வீதமான ஆதரவு பெறுவ தென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. 

மேலும் சிங்கள குடியேற்றங்களை வெறுமனே மகாவலி அதிகாரசபையில் பணியாற்றும் ஒரு ஊழியர் செய்யவில்லை. இந்த குடியேற்றங்களின் பின்னால் அரசாங்கத்தின் பாரிய திட்டமிடல்கள் உள்ளன என்றார். 

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், முன்னாள் ஆளுநர் பளிகக்காரவுடன் ஒருதடவை பேசியிருந்தபோது மகாவலி அதிகாரசபை சட்டத்தில் சிறு மாற்றம் செய்தால் போதுமானது என அவர் தமக்கு கூறியிருந்ததாக கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு