அடத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தமைக்காக மருதங்கேணி பிரதேச செயலா் அச்சுறுத்தப்படுகிறாா்..

ஆசிரியர் - Editor I
அடத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தமைக்காக மருதங்கேணி பிரதேச செயலா் அச்சுறுத்தப்படுகிறாா்..

வடமராட்சி கிழக்கு- மருதங்கேணியில் அடாத்தாக தங்கியிருந்து கடற்றொழில் செய்துவரும் தென்பகுதி மீனவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் மருதங்கேணி பிரதேச செயலரை தென்னிலங்கையில் இனத்துவேசமாக சித்தாிக் கும் சிலா் அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைள் குறித்தான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அத்துமீறி சட்ட விரோத தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் போது பாராளுமன்ற மற்றும் மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் மற்றும் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் எதிர்கால அபாயங்கள் குறித்தும் விளக்கியிருந்தனர். 

அதே போன்று நீரியல் வளத் திணைக்களத்தினரும் தமது விளக்கத்தை அளித்திருந்தனர். இந்நிலையிலையே சட்ட ரீதியாகச் செயற்பட்டு வருகின்ற பிரதேச செயலாளரை இனத்துவேசமாக தென்னிலங்கையிலுள்ளவர்கள் கருதுவதாக அரச அதிபர் தெரிவித்தார். 

அதே போன்றே பல்வேறு அச்சுறுத்தல்கள் பிரதசேச செயலருக்கு விடுக்கப்பட்டு வருவதாக பருத்திதுறை பிரதேச பைத் தவிசாளரும் குறிப்பிட்டிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு