SuperTopAds

கிளிநொச்சியில் பாடசாலையை உடைத்து 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் பாடசாலையை உடைத்து 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு..

கிருஸ்ணபுரம் இராமகிருஸ்னா வித்தியாலயத்தில் 3ம் திகதி அதிகாலையில் திருடர்கள் உள் நுழைத்து பல லட்சம் ரூபா  பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக அதிபரினால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட ஊட்டப் பாடசாலைத் திட்டத்தில் போரிற்குப் பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலையின் அதிபர் காரியாலயம் , களஞ்சிய அறை கண்ணி அறை ஆகியவற்றுடன் நீர் இறைக்கும் இயந்திர அறைகள் என்பன உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

இவ்வாறு களவாடப்பட்ட பொருட்களில் கணனி , புரயெக்ற்றர் , நீர் இறைக்கும் பொறி , பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களே களவாடப்பட்டுள்ளதோடு அனைத்து அறைகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளமையினால் குறித்த பாடசாலைக்கு 5 லட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

சனிக் கிழமை தரம் 5 மாணவர்களிற்கான வகுப்புக்கள் இடம்பெற்றதன் பின்னர் பாடசாலை மூடிச் சென்ற நிலையில் ஞாயிறு காலை வந்தவேளையிலேயே குறித்த திருட்டு இடம்பெற்றதனை அவதானித்த நிலையில் கிளிநொச்சி பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.