SuperTopAds

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரியின் மறைவு இந்த நாட்டில் நீதிக்காக ஏங்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு..!

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரியின் மறைவு இந்த நாட்டில் நீதிக்காக ஏங்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு..!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்த பலரை சட்டம் போராட்டத்தால் மீட்டெடுத்த பெண்மணியாக சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கொளரி சங்கரி தவராசா திகழ்ந்தவர் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கெளரி சங்கரியின் 67ஆவது பிறந்த நாள் நிகழ்விவும் 1ம் ஆண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர் கெளரி சங்கரியின் பெயரை பாதுகாப்பு தரப்பினரே பயங்கரவாதி என குறிப்பிடும் அளவிற்கு பாதுகாப்புதுறைக்கு எதிரான வழக்குகளில் கெளரி சங்கரி ஆஜராகி வந்தவர். 

சட்டத்துறையை வாழ்க்கையை வருமானம் பெறும் தொழிலாகப் பலர் பார்க்கின்ற நிலையில் தொண்டு அடிப்படையில் வழக்குகளை நடாத்தி பலரது உள்ளங்களில் வாழ்கிறார் தமிழ் இளையோர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானபோது, 

பல சட்டத்தரணிகள் வழக்கு தொடர பின்னடித்தபோது அமரர் கெளரி சங்கரி தானாக முன்வந்து கைது செய்யப்பட்டவர்களுக்காக ஆஜரானவர். அந்த வகையில் கெளரி சங்கரியின்  இழப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல 

இலங்கை நாட்டில் நீதிக்காக ஏங்குகின்ற அனைவருக்கும் இழப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.