தென்பகுதி மீனவர்கள் வெளியேறாவிட்டால் யாழ்.மா வட்ட நீரியல்வள திணைக்களம் இயங்காது..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவர்கள் வெளியேறாவிட்டால் யாழ்.மா வட்ட நீரியல்வள திணைக்களம் இயங்காது..

யாழ்.மருதங்கேணி பகுதியில் அடாத்தாகத் தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடன் வெளியேற்றவேண்டும் இல்லையேல் யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் நீரியல் வ ளத்துறை திணைக்களம் இயங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியாக கூறுவோம் என மாகா ணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க ம் கூறியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்கள் உடன் வெளியேறவேண்டும் எனக்கோரி மீ னவர்கள் கேட்டுவருகின்றார்கள். இதனடிப் படையில் நேற்றய தினம் மருதங்கேணி பிரதேச செயலர் அலுவலகத்தில் விசேட கல ந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது நாளை நடைபெறவுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் எஸ்.சுகிர்தன் ஆகி யோர் கலந்து கொண்டு மேற்படி தென்பகு தி மீனவர்களை உடன் வெளியேற்றா விட் டால் நீரியல்வள திணைக்களம் யாழில் இயங்க முடியாது என கூறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கூறியிருந்தார்.

இதற்கமைய நாளை நடைபெறும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதனை கூறவுள்ளதாக கூறியிருக்கும் சிவா ஜிலிங்கம், நாளைய கூட்டத்தில் நீரியல்வ ளத்துறை திணைக்களம் உரிய பதில் கொ டுக்கவேண்டும் இல்லையேல் யாழ்.மாவட்ட  நீரியல்வளத்துறை திணைக்களம் இழுத்து மூடப்படும் என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு