மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களுக்கு 5ம் திகதிவரை காலக்கெடு..

ஆசிரியர் - Editor I
மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களுக்கு 5ம் திகதிவரை காலக்கெடு..

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிபகுதி மீனவர்களை எதிர்வரும் 5ம் திக திக்குள் வெளியேற்றவேண்டும், இல்லையேல் 6ம் திகதி பாரிய மக்கள் போராட்டத்திற்கு த யாராகுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

வடமராட்சி கிழக்கு –மருதங்கேணி பகுதியில் அடாத்தாக தங்கியுள்ள சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து ஆராய்வதற்கான கல ந்துரையாடல் இன்று காலை மருதங்கேணி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியிரு க்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்தையே கூட்டத்தில் சகலரும் இணை ந்து தீர்மானமாக எடுத்திருக்கின்றார்கள். 

இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சும ந்திரன் கூறுகையில், மருதங்கேணியில் தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை உடனடியா க வெளியேற்றவேண்டும் என மத்திய கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடப்படும். 

அதற்கமைய எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய் கிழமைக்கு முன்னர் தகுந்த பதில் வழங்கப்ப டவேண்டும். 5ம் திகதிக்குள் தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றால் 6ம் திகதி பாரிய மக்க ள் போராட்டம் ஒன்றுக்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும். 

அந்த போராட்டத்தில் நாமும் கலந்து கொள்வோம். அதற்கும் தகுந்த பதில் உடனடியாக கி டைக்கவில்லையாயின் அடுத்தகட்டம் மிகப்பெரியளவில் மக்களை ஒன்று திரட்டி அரசியல்வா திகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் திணைக்களத்தை

முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் வடமராட்சி கிழக்கு மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய கலந் துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாகாணசபை உறுப்பினர்கள்

எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலர் ஆகியோர் கல ந்து கொண்டனர். இதேவேளை மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவ ர்களை 1 மாதத்திற்குள் வெளியேறுமாறு மருதங்கேணி பிரதேச செயலர் 

உத்தரவு வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு