போதை பொருள் கடத்தல்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். ஆளுநர் உத்தரவு.
வடமாகாணத்தில் அதிகரித்துவரும் போதை பொருள் பாவனையை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்று நேற்று (31.05.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
சர்வமத தலைவர்கள் ஆளுநரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் சர்வமதத் தலைவர்கள், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், விசேட அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் இவர்களுடன் கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் மத்தியிலும் அதிகரித்துள்ள போதைவஸ்த்து பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டதுடன். இச்செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை காலத்துக்கு காலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.
மக்கள் மத்தியிலும் பாடசாலை மட்டங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன். முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸார் துரிதகதியில் செயற்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் பணித்தார்.
i