வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கும் வடமாகாணசபை, எதிா்கட்சி தலைவா் சாடல்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கும் வடமாகாணசபை, எதிா்கட்சி தலைவா் சாடல்...

வடமாகாணசபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள், வடமாகாணத்திற்குள் சேவையாற்ற வரவேண்டும். இல்லையேல் அவர்களுக்கான ஊதியத்தை வடமாகாணசபை உடனடியாக நிறுத்தவேண்டும். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். வடமாகாண சபையின் 123வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றி ருந்தது. இதன்போது வடமாகாணசபையில் ஊதியம் பெற்றுக் கொண்டு 

வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக மாகாண முதலமைச்சரிடம் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வாய்மொழிமூல கேள்வி ஒன்ஐ ற கேட்டிருந்ததுடன், பிரேரணை ஒன்றையும் 

சபைக்கு சமர்பித்து உரையாற்றும்போதே எதிர்கட்சிதலைவர் சி.தவராசா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கட்சி தலைவருடைய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் வடமாகாணத்திற்கு வெளியே 

68 முன்பள்ளிகளில் பணியாற்றும் 90 ஆசிரியர்களுக்கு வடமாகாணசபை ஊதியம் கொடுப்பத hகவும் இந்த கொடுப்பனவுகள் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியினால் அங்கீகரிக்கப்பட்டு 2011ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டுவரும் நிலையில், 

எதிர்வரும் யூன் மாதம் 31ம் திகதியுடன் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என ஆசிரியர் களுக்கும், முன்பள்ளிகளுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து வட மாகாணசபையில்  ஊதியம்  பெற்றுக் கொண்டிருக்கும் 

சிற்றூழியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படவேண்டும் எனக்கோரி பிரேரணை ஒன்றைச் சமர்பித்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த அஸ்மின் 1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கே 

அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரையில் அவர்களுடைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படகூடாது. அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும். என கேட்டிருந்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வடமாகாணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் தொடர்பாக முன்னர் பேசப்பட்டுள்ளது. 

அதன்படி அவர்கள் வடமாகாணத்திற்குள் வரவேண்டும் அல்லது அவர்கள் தற்போதுள்ள மாகாணத்துடன் இணையவேண்டும் என கேட்கப்படவேண்டும். அதற்கு ஒரு கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். 

அதன் பின்னரும் அவர்களிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைக்காவிட்டால் ஊதியத்தை நிறுத்தலா ம் என்றார். இதனை தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் எதிர்கட்சி தலைவரின் பிரேரணை மனிதாபிமானமற்றது எனவும், 

அவர் தனது பிரேரணையை மீள பெறவேண்டும் எனவும் கேட்டார். எனினும் பிரேரணை மீள பெறப்படாமல் வடமாகாணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு வடமாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள் வடமாகாணத்துடன் 

இணையவேண்டும் இல்லையேல் அவர்களுடைய ஊதியத்தை நிறுத்தவேண்டும். ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் எனவும் எதிர்கட்சி தலைவர் கூறினார். 

அதனையே சபையும் தீர்மானித்தது எதிர்கட்சி தலைவரும் ஏற்றுக் கொண்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு