மரண வீட்டில் மலா் மாலை அணிவித்து வரவேற்கமாட்டாா்கள், சாட்டையடி கொடுத்த முதலமைச்சா் சீ.வி...

ஆசிரியர் - Editor I
மரண வீட்டில் மலா் மாலை அணிவித்து வரவேற்கமாட்டாா்கள், சாட்டையடி கொடுத்த முதலமைச்சா் சீ.வி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு புனிதமான நிகழ்வு என கூறிக்கொண்டு தமக்கு முன்னுரிமை வழங்கப்படாமை குறித்து பேசிக் கொண்டிருந்த வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு, மரண வீட்டில் மலர் மாலை போட்டு வரவேற்கமாட்டார்கள் என முதலமைச்சர் பதிலளித்தார். 

வடமாகாணசபையின் 123வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா விசேட கவ னயீர்ப்பு ஒன்றை சபைக்கு கொண்டுவந்து உரையாற்றுகையில், 

முள்ளிவாய்க்கால் நினைவேந் தலை வடமாகாணசபை நடாத்துவதாக கூறி எங்களிடம் நிதி பங்களிப்பு கேட்கப்பட்டது. அதனால் நானும் 7 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்தேன். ஆனால் நினைவேந்தலை வடமாகாணசபை நடாத்தியதாக தெரியவில்லை. 

அங்கே கறுப்பு உடையணிந்த சிலர் நடத்துவதாகவே தெரிந்தது. ஆகவே வடமாகாணசபை நடாத்தாத ஒரு நிகழ்வுக்காக பணம் கொடுக்க இயலாது  ஆகவே எனது பணத்தை திருப்பி தாருங்கள். 

என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டிருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தயவு செய்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து இப்படி பேசாதீர்கள் என கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், எதிர்கட்சி தலைவர் கேட்பதில் நியாயம் உள்ளது. ஆனால் நினைவேந்தலுக்கான சகல ஒழுங்குகளையும் வடமாகாணசபையே செய்திருந்தது. 

ஆனால் இடையில் சில குழப்பங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் நினை வேந்தலின் தாற்பரியம் காரணமாக நாங்கள் அந்த இடத்தில் அமைதியாக இருந்தோம் என்றார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் கூறுகையில், 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு புனிதமான நிகழ்வு. ஆனால் நினைவேந்தல் குறித்த பேச்சில் ஒரு மாதிரியாகவும், நினைவேந்தல் நடந்தபோது நடத்தையில் வேறு ஒரு மாதிரியாகவும் இருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

மேலும் நினைவேந்தலில் கட்சி தலைவர்கள் நடத்தப்பட்ட விதம் தொ டர்பாகவும் மாறுபட்டிருந்ததாகவும் கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உ றுப்பினர் கே.சயந்தன் மாகாணசபை நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தால் ஒழுங்குகள் 

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார். தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், 18ம் திகதி காலை 10 மணிவரையில் ஒழுங்குகள் எல்லாம் ஒழுங்காகவே இருந்தன. 

ஆனால் ஒலிபரப்பாளர் வருவதற்கு சற்று தாமதமானதால் ஒலிவாங்கியை ஒருவர் எடுத்தக் கொண்டார். இன்னொருவர் பிரதான ஈகை சுடரை எடுத்தக் கொண்டார். இப்படி பல என கூறினார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து கூறுகையில், 

உண்டியலில் போட்ட பணமாக நினைத்து எதிர்கட்சி தலைவர் இதனை மறக்கவேண்டும் என்றார். தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கருத்து கூறுகையில், மரண வீட் டில் மலர்மாலை அணிவித்து எங்களை அழைத்து செல்வார்கள்  என எதிர்பார்க்க இயலாது. 

நினைவேந்தலின் தாற்பரியத்தை உணர்ந்து பேசுங்கள் என முதலமைச்சர் பதிலளித்துள்ளது டன், எதிர்கட்சி தலைவர் கொடுத்த பணத்திலும் தான் எவருக்கும் முள் குத்தாமல் நிலம் துப் புரவாக்கப்பட்டது. தண்ணீர் கொடுக்கப்பட்டது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு