SuperTopAds

வாள்வெட்டில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்!

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் மரணம்!

வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 6ம் திகதி கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த வட்டக்கச்சி - மாயவனுார் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (வயது33) என்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.