கொழும்பில் வீடு வீடாக பொலிஸ் பதிவு - நிரப்பி கொடுக்க வேண்டாமென்கிறார் மனோ!

கொழும்பில் பொலிஸாரால் வீடுவீடாக சென்று பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கமைய, வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு படிவங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாமென மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.