திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து 4ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாகாணசபை உறுப்பினா்கள் சந்திப்பு..
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 4ம் திகதி மாலை 4 மணிக்கு வடமாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்திருக்கின்றார்.
இந்த கலந்துரையாடல் குறித்து அவை தலைவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு மாவ ட்டத்தின் எல்லை கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியே ற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள்
குறித்து ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் கடந்த 4ம் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டிருந்தனர். இதனடிப்படையில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கான
அழுத்தத்தை மத்திய அரசாங்கத்திற்கு கொடுப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்களும், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதென தீர்மானிக்கப் பட்டிருந்தது.
ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடி சந்திப்பு இடம்பெறவில்லை. அத னடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு எதிர்வரும் 4ம் திகதி மாலை 4 மணிக்கு வடமா காணசபை பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறும்.
இந்த சந்திப்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு
தங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என அவை தலைவர் கூறியிரு க்கின்றார்.