யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் 66 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் 66 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை..

யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி ந.விஜிதரன் கூறியுள்ளார். 

நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தினை ஏற்றுக்கொண்ட குறித்த 63 வர்த்தகர்களுக்கும் நீதிமன்றத்தினால் 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தட்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக யாழ்.மாவட்டம் பூராகவும் பாவனையாளர் அதிகார பையின் உத்தியோகத்தர்களால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, 

அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களை விற்பனை செய்தமை , உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, 

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை சேர்த்தமை, 

இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத கால உத்தரவாத காலம் வழங்க தவறியமை , அரச நியமங்கள் தரச் சான்று பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை காட்சிப்படுத்தியமை, 

போன்ற விடயங்களை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தொடர்ச்சியாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

னவே யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் விதிமுறைகளுக்கு அமைய தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு