புத்தளத்தில் பணியாற்றும் 90 ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தியது வடமாகாணசபை..

ஆசிரியர் - Editor I
புத்தளத்தில் பணியாற்றும் 90 ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தியது வடமாகாணசபை..

புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிக ளுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் ஊடா  க வழங்கப்படும் நிதியை உடன் நிறுத்துமாறு கோரி மாகாண கல்வி அமைச்சின் செயலாள ர் மன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு கடி தம் எழுதியுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முன்பள்ளி நியதிச் சட்டத.தின் கீழ் வடக்கு மாகாணத்தில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களிற்கு தற்போது தலா 6 ஆயிரம் ரூபா மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. 

இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவில் புத்தளத்தில் இயங்கும் 68 முன்பள்ளிகளில் கற்பிக்கும் 90 ஆசிரியர்களிற்கும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது.

குறித்த செய்தியின் பிரகாரம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அழைத்த ஆளுநர்  புத்தளத்திற்குச் செல்லும் வடக்கு மாகாண சபையின் நிதிகளை உடன்நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். 

இதன் அடிப்படையில் புத்தளத்தில் இயங்கும் முன்பள்ளிகளிற்குச் செல்லும் நிதிகளை உடன் திறுத்துமாறு கடந்த 2018-05-23ம் திகதிய கடிதம்மூலம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் புத்தளத்திற்குச் சென்ற 90 ஆசிரியர்களிற்குமான கொடுப்பனவு மே மாதம் முதல் நிறுத்தப்படும் என மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேநேரம் புத்தளத்தில்இயங்கும் 6 பாடசாலைகளில் கற்பிக்கும் 142 ஆசிரியர்களிற்கான சம்பளம் தொடபில்  அறிவுறுத்தல்களில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு