கிராமத்திற்கு ஒரு மில்லியன் திட்டம் புதிய வடிவில் வருகிறது...

ஆசிரியர் - Editor I
கிராமத்திற்கு ஒரு மில்லியன் திட்டம் புதிய வடிவில் வருகிறது...

கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கும் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலை யில் அந்த திட்டத்திற்கு பதிலாக புதிய ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதம ர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மானிப்பாய் பிரதேச சபை தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்படி பதிலை வழங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. மேற்படிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபை தலைவர் அரசாங்கத்தினால் கிராமத்திற்கு ஒரு மில்லியன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆயினும் இந்த

வருடம் அந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாமலுள்ளது. அதற்கான காரணம் என்ன? அ ந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் அந்த திட்டத்திற்கு பதிலாக புதியதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு