முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...

ஆசிரியர் - Editor I
முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...

ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதர் ரணில் விக்கிரம சிங்க உறுதியளித்துள்ளார். 

இருநாள் விஜயமாக யாழ்.வந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு ந்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் 

மாவை சோ.சேனாதிராஜா உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் மண்ணில் இறந்த உறவுக ளை நினைவுகூருவதற்கு சகல மக்களுக்கும் உரித்துள்ளது. மேலும்  முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். 

ஜனநாயக வழிமுறைக்கு அவர்கள் திரும்பியிருக்கும் நிலையில் இருவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் எமது கட்சியின் பங்காளி கட்சிகளில் ஒன்றில் இருக்கின்றார்கள். 

இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். என கேட்டுக் கொ ண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடுப்பு பொலிஸாருட ன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பாக 

உடன் நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு