வித்தியா படுகொலை வழக்கு!பொலிஸ் ஆய்வாளர் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை!

ஆசிரியர் - Editor II
வித்தியா படுகொலை வழக்கு!பொலிஸ் ஆய்வாளர் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளர் ஸ்ரீகஜனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

வழக்கில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார்

இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை அறிக்கையை அரச சட்டவாதி நிசாந்த இன்று மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்.

இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்ற வேளை யாழ் பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாகவுள்ள சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்

அவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்துக்குட்படுத்தி அவர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு