பிரதமர் ரணில் யாழ்.வருகை, 600 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் சாத்தியம்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் யாழ்.வருகை, 600 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் சாத்தியம்..

யாழ்.மாவட்டத்திற்கு  இன்று வருகைதந்துள்ள பிரதமர் ரணில் விக் கிரமசிங்ஹ வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நகர் பகுதிகளில் படையினர்வசம் உள்ள சுமார் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்தமான நிலங்களை மக்களிடம் மீள கையளிப்பதற்கான அறிவிப்பை செய்வார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நகர் பகுதிகளில் மக்களுடைய காணிகளில் படையி னரின் முகாம்கள் அமைந்துள்ளன. இந்த காணிகளை விடுவிப்பதற்கான இணக்கம் முன்னதாக வே எட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை   பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ செய்வார் எனவும் அந்த தவல்கள் 

தெரிவிக்கின்றன. மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நகர் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை விடுவிப்பதற்கான இணக்கம் பல ம ட்டங்களிலில் இருந்தும் பெறப்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்த தகவல்களின் படி அடுத்துவரும் 6 மாதங்களுக்கு பின்னர் மேற்படி காணிகள்

மக்களிடம் மீள வழங்கப்படும் என அறியக்கூடியதாக உள்ளது. குறித்த 6 மாதகாலம் என் பது இராணுவம் தமது கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை வேறு இடங்களுக்கு நகர்த்துவ தற்கான கால அவகாசம் என கூறப்படுகின்றது. இதன்படி யாழ்.நகரை அண்டிய வைத்தியசாலை வீதியில் உள்ள படைமுகாம்கள், மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ-9 பிரதான வீதி

யில் உள்ள படைமுகாம்கள் அகற்றப்பட்டு அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்படலாம்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு