மோசமாக நடந்துகொண்ட சாரதிகள், மக்கள் விசனம்..
பேருந்து சாரதிகள் இடையிலான சண்டை யில் மக்களை ஏற்றாமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடிய சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை உண்டா க்கியுள்ளது.
இன்றைய தினம் ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம்- கொழும்பு பயணிகள் பேருந்தும், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பயணிகள் பேருந்தும் ஒருவரை ஒருவர் முந்தியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
சாவகச்சேரியை அண்மித்தபோது இரு பேருந்து சாரதிகளுக்கும் முறுகல் நிலை உருவானது. பின்னர் பொலிஸார் அங்கே நின்றமையினால் முறுகல் நிலை முடிந்தது. ஆனாலும் இரு பேருந்துகளும் போட்டிக்கு ஓடுவதை நிறுத்தவில்லை.
மேலும் பயணிகள் எவரையும் ஏற்றாமல் சென்றனர். அதேபோல் நகர் பகுதிக்குள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடியுள்ளனர்.
வயதானவர்களை ஏற்றாமல் இளைஞர்க ளை ஓடும்போதே ஏற்றியுள்ளனர். இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளதுடன், மோசமான விபத்துக்களுக்கு இந்த சாரதிகளே காரணம் எனவும், இவர்களை சட்டத்தினால் தண்டிக்கவேண்டும் எனவும் கூறினர்.
மூலம்:- சமூக வலைத்தளம்