SuperTopAds

வடமாகாணம் முழுவதும் கனமழை மற்றும் மிதமான மழை 5ம் திகதிவரை தொடரும்! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் முழுவதும் கனமழை மற்றும் மிதமான மழை 5ம் திகதிவரை தொடரும்! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 05.09.2022 வரை தொடர வாய்ப்புள்ளது. 

மேற்கண்டவாறு யாழ்.பல்பலைகழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மிகப் பரந்த பரப்பில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக மழை கிடைக்கும்போது செறிவான மழை கிடைக்கும் என்பதுடன் 

இடிமின்னல் நிகழ்வுடன் கூடியதாகவே இம்மழை கிடைக்கும். அத்துடன் இந்த வளிமண்டல சுழற்சி அடுத்த சில தினங்களில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கியே அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.