தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் - நல்லை ஆதீன குருமுதல்வர் உள்ளிட்ட குழுவினர் இடையில் யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தை..!
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் போராசிரியர் மானவிதானவுக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்த்தான தலைவா கலாநிதி ஆறுதிருமுருகனுக்குமிடையில் இன்று யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கின்றது.
பேராசிரியர் புஸ்பரட்ணத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக, கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில்
மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்.
அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருள் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவித்தபோது
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில்
வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றனஎனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தெரிவித்தார் என்றார்,