யாழ்.காரைநகரில் 1200 சிகரெட்டுக்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!
யாழ்.காரைநகரில் சட்டவிரோதமான சிகரட் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் விசேட அதிரடிப்படைினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டினை திருட்டுத்தனமாக விற்பனை செய்தகாரைநகரை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1200 சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.