SuperTopAds

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் பலி! 10 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் பலி! 10 பேர் படுகாயம்..

சிரமதான பணி ஒன்றிற்காக மக்கள் சிலரை ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மூதூர் பாச்சனூர் பகுதியில் இன்று காலை இடம் பெற்றுள்ளது. கந்தளாயில் இருந்து சேருவிலவுக்குச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது அதில் 21 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.