தண்டவாளம் மாறும்போது தடம்புரண்டு விபத்துக்குள்ளான ரயில்!
கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலைக்கு நேற்றிரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிறஸ் ரயில் தண்டவாளம் மாறும்போது ரயில் பெட்டிகள் சில தண்டவாளத்திலிருந்து வழுகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சீனன்குடா ரயில் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் ரயில் மோதி நடைபாதை சேதமடைந்துள்ளது.