முள்ளாள் போராளியின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு...

தமிழீழ விடுதலை புலிகளின் புலானாய்வு பிரிவு போராளி ஒருவருடைய வீட்டிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் ரவைகளை விமானப்படையினர் இன்று மீட்டுள்ளனர்.
முன்னாள் போராளி ஒருவருக்கு சொந்தமான வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக விமானப்பபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பபட்டுள்ளன.
மேற்படி ஆயுதங்கள் இருப்பதாக விமானப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் அனுமதியை பெற்று விமானப்படையினர், நீதிமன்ற அலுவலர்கள், மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்போது கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு வெளியே நிலத்தில் சுமார் 6 அடி ஆளத்தில் இரும்பிலான பொருள் இருப்பதை அடையாளம் காட்டும் கருவி ஊடாக அறிந்து கொண்ட விமானப்படையினர்,
அதனை தோண்டியுள்ளனர். இதன்போது எண்ணை கொழுப்பு பூசப்பட்டு பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு இருப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களையும், அடையாளம் காட்டும் கருவியையும் விமானப்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இப்போதும் பயன்படுத்தக்கூடிய நிலையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த வீட்டின் உரிமையாளரான தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறை போராளி தீபன் என அழைக்கப்படும் முனியாண்டி ரஞ்சன் என கூறப்படுவதுடன்,
அவர் போருக்கு பின்னர் பெரிதும் பேசப்பட்ட அப்பன், கோபி ஆகியோருடைய பிரச்சினைகளுடன் மிக நெருக்கிய தொடர்புடையவர் எனவும் பின்னர் அவர் தேடப்பட்ட நிலையில் நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாட்டில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.