முல்லைத்தீவு- முத்தைஜயன்கட்டு குளம் புனரமைப்புக்கு 1000 மில்லியன் நிதி தேவை..

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு கீழ் உள்ள கட்டுமானங்களைப்புனரமைப்பதற்கு ஆயிரம் மில்லியனுக்கு மேற்பட்டநிதி தேவைப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற பல நீர்ப்பாசனக்குளங்களின் கட்டுமானப்பணிகள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுகின்றன.
|குறிப்பாக, முத்துஐயன்கட்டு உடையார்கட்டு, மருதமடு, போன்ற குளங்களின் புனரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், இக்குளத்தின் கீழான நீர்விநியோக வாய்க்கால்கள் நீர்ப்பாசன வீதிகள் கழிவு வாய்க்;கால்கள் புனரமைக்கப்படாது காணப்படுகின்றன.
இதனால்நீர்விநியோககங்களின் போது நீர் வீண்விரயமாவதுடன், விவசாயிகளும் பல்வேறு கஸ்ரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவற்றைப்புனரமைத்து தருமாறு விவசாய அமைப்புக்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றன.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில்,மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளத்தின் கீழான புனரமைப்புப்பணிகளுக் ஆயிரம் மில்;லியனுக்கு மேலான நிதி தேவையென்றும் இதேபோன்று ஏனைய குளங்களிற்கும் கூடுதலான நிதி தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.