யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் அனுமதி..! கடந்த மாதத்தில் 2 கொவிட் மரணங்கள் பதிவு..
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு வாரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா கூறியிருக்கின்றார்.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர் பெற்றுக் கொண்டவர்கள் என பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.