SuperTopAds

கிளிநொச்சி தட்டுன்கொட்டி நீர் விநியோக திட்டம் 60 வீதம் பூர்த்தி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி தட்டுன்கொட்டி நீர் விநியோக திட்டம் 60 வீதம் பூர்த்தி..

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்திற்கான குடிநீர்விநியோகத்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளின் 60வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்;தின் வருடம் முழுவதும் குடிநீர விநியோகம் மேற்கொள்ளவேண்டிய பிரதேசங்களில் ஒன்றாகக் காணப்படுகின்ற தட்டுவன்கொட்டிக்கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்  வழங்கல் மற்றும் கழிவுகள் சுத்திகரிப்புத்திட்டத்தின் கீழ் தட்டுவன்கொட்டி கிராமத்தில் 400 பயனாளிகளுக்கான குடிநீரை வழங்கும் பொருட்டு  இதற்கான கட்டுமானப்பணிகள் 76 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பரந்தன் பகுதியிலிருந்து தட்டுவன்கொட்டிக்கான நீரைக்கொண்டு செல்லும் குழாய்கள் பொருத்தும் பணிகள் மற்றும் ஏனைய கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பிரதேசத்தின் குடிநீரவிநியோத்திற்கான கட்டுமானப்பணிகள் 60 வீதம் நிறைவுபெற்றிருப்பதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.