அரசியல் நாகரீகம் இல்லாமல் நானும் பேசுவேன், மனோகணேசனுக்கு சிவாஜிலிங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
அரசியல் நாகரீகம் இல்லாமல் நானும் பேசுவேன், மனோகணேசனுக்கு சிவாஜிலிங்கம் எச்சரிக்கை..

 

அரசியல் நாகரீகம் தெரியாமல் அமைச்சர் மனோகணேசன் பேசுவாராக இருந்தால், மனோகணேசன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்? கொழும்பு மாநகரச முதல்வர் ரோசி சேனநா யக்கவுக்கும் அமைச்சருக்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் நானும் பேசுவேன். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். மாகாணச பை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் மனோகணேசன் கூ றிய கருத்து தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்

சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூ றியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அரசியல் நாகரீகம். அந்த நாகரீகத்தை அறியாத 

அமைச்சர் மனோகணேசன் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி என் னை விமர்சித்துள்ளார். அவரைபோல் விமர்சிப்பதாக இருந்தால் கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்க- அமைச்சர் மனோகணேசன் தொடர்பு பற்றியும் நான் பேசலாம். 

ஆனால் அவர் மதிக்காத அரசியல் நாகரீகத்தை நான் மதிக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நா ன் அமைச்சர் மனோகணேசனிடம் கேட்கிறேன். தமிழ் அல்லது சிங்கள மொழியில் எங்கு வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் நடத்த தயாரா? 

அப்படி விவாதம் நடத்தினால் யார் அ ரசியல் கோமாளிகள் என்பதை மக்கள் நிச்சயமாக பார்ப்பார்கள். மேலும் அமைச்சர் மனோகணேசனை அரசியல் நாகரீகத்திற்குள் நின்று நான் விமர்சிப்பதற்கு காரணம் மலைகய மக்கள் மீதுள்ள மரியாதை மட்டுமே. 

ஆனால் இதற்கு பின்னரும் அமைச்சர் மனோகணேசன் வரம்பு மீறி பேசுவராக இருந்தால் நாங்களும் வரம்புக்குள் நின்று கொண்டு அரசியல் நாகரீகத்தை பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை. 

மனோகணேசன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்? முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் இருந்திருந்தால் அமைச்சர் மனோகணேசனுக்கு என்ன கூறியிருப்பார்கள், என்பது பற்றியெல் நாம் நாங்களும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் வரும். 

அதேபோல் விக்கிலிக்ஸ் ஆவணம் இன்றும் உள்ளது. அதில் சம்மந்தன் மற்றும் நான் சர்வதேச நீதி விசாரணை வேண்டும். படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என கேட்டிருப்பது கூறப்பட்டுள்ளது. 

அதே விக்கலீக்ஸ் ஆவணத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம் என அமைச்சர் மனோக ணேசன் கூறுவதும் உள்ளது. ஆகவே படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் என கேட்பதற்கு துணிவற்ற அமைச்சர் மணோகணேசன் 

எங்களை கோமாளி என்பது வேடிக்கை. என சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு