பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி, பெண் கூச்சலிட்டதால் கூரிய ஆயுதத்தால் குத்திய திருடன்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி, பெண் கூச்சலிட்டதால் கூரிய ஆயுதத்தால் குத்திய திருடன்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்..

பேருந்திலிருந்து இறங்கிய இளம் பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த இளம்பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, பெண் தடுக்க முயற்சித்ததுடன் மக்களின் உதவியை கோரி சத்தமிட்டுள்ளார். இதன்போது குறித்த திருடன் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணை காயப்படுத்தியதுடன், 

சங்கிலியை அறுத்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திரண்ட மக்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்ததுடன், சங்கிலியை மீட்டு பெண்ணிடம் கையளித்தனர்.

தொடர்ந்து, பொலிசாரை அழைத்து திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு