சுரபி நகர் வீட்டுதிட்டம் அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் திறந்துவைக்கப்பட்டது...

ஆசிரியர் - Editor I
சுரபி நகர் வீட்டுதிட்டம் அமைச்சர் சஜித் பிறேமதாஸவினால் திறந்துவைக்கப்பட்டது...

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் செமட்ட செவன வேலைத்திட்டத்தின் கீழ் பச்சிலை பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இத்தாவில் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்து றை அமைச்சர் சஜித் பிறேமதாஸ திறந்து வைத்துள்ளார். 

சுரபி நகர் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த வீட்திட்டத்திற்கான அடிக்கல் கடந்த வருடம் 03ம் மாதம் 13ம் தி கதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனால் நாட்டப்பட்டது. இதற்கமைய சுரபி நகரில் 25 பயனாளிகளுக் கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த வீட்டுதிட்டம் கையளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிறேமதாஸ மற்றும் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்தனர். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட  75 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், 

200 பேருக்கு தொழில் உபகரணங்களும், 800 பேருக்கு 50 ஆயிரம், மற்றும் 1 லட்சம் ரூபாய்கான காசோலைக ளும் மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டக்காக வழங்கிவைக்கப்பட்டது. மேலும் அமைச்சர்கள் இவரும் இ ணைந்து சுரபி நகரில் மரக்கன்றுகளையும் நாட்டினர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு