​தந்த நிதிக்கு என்ன நடந்தது? விழி பிதுங்கி அமைச்சர் அனந்தி.

ஆசிரியர் - Editor I
​தந்த நிதிக்கு என்ன நடந்தது? விழி பிதுங்கி அமைச்சர் அனந்தி.

வடமாகாண ஆளுநர் நிதியதிலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங் கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும். இ ல்லையேல் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட் டினை ஆதரிக்க மாட்டோம் என அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியிருக்கின்றார்.

வடமாகாணசபையின் 111வது அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து கூறும்போதே அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மாகாண ஆளுநர் நிதியதிலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நி தியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்படவேண்டும் என மாகாணசபை நிபந்தனை வி

தித்திருந்ததுடன், அவர்களுக்கு கொடுப்பதற்கு சபை அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியிருந் தது. இதற்கமையவே கூட்டுறவு திணைக்களத்திற்கும் 32 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிதி செலவிடப்பட்டுள்ளதா? செலவிடப்பட்டிருந்தால் மாகாணசபையின் அனுமதி பெறப்பட் டதா? செலவிடப்படவில்லை என்றால் அது தொடர்பான தகவல்களை அடுத்த அமர்வில் மா

காண கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கூட்டுறவு திணைக்களத்திற்கான ஒதுக்கீட்டை ஆதரிக்கமாட்டோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு