பசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்!

ஆசிரியர் - Admin
பசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்!

விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றித்து நடத்தவேண்டுமென்பதில் தொடர்ச்சியாக பாடுபட்டு பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில்  பசீர் காக்கா முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில் இறுதி யுத்தத்தில் பலிகொடுத்த பிள்ளைக்காக தனது இன்னொரு மகனுடன் பசீர்காக்கா இன்று வருனை சுடரேற்றி அஞ்சலித்திருந்தார்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் தினத்தன்று அவர் மௌன விரதத்தை அனுட்டிப்பதும் வழமையாகும்.

இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்து வெளியேறிய முதலமைச்சர் ஓரமாக சுடரேற்றி அழுதுகொண்டிருந்த பசீர் காக்காவை கண்டு கொண்டார். 

அதனையடுத்து அவரை தேடிச்சென்று ஆரத்தழுவி தனது துயர்பகிர்வை தெரிவித்துக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு