மகாதேவா சிறுவர் இல்லத்தில் நடப்பது என்ன?

ஆசிரியர் - Editor I
மகாதேவா சிறுவர் இல்லத்தில் நடப்பது என்ன?

கிளிநொச்சி- மகாதேவா சிறுவர் இல்லத்தில் என்ன நடக்கிறது என மாகாண சிறுவர் நன்னடத்தை அi மச்சு மற்றும் மாகாண சமூகசேவைகள் அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களும் இணைந்து விசாரணை நடத்தி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடாக சபைக்கு சமர்பிக்கும்படி அவை தலைவர் சீ.வி.கே.சி வஞானம் உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாணசபையின் 111வது அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் இ.n ஜயசேகரம் மேற்படி மகாதேவா சிறுவர் இல்லம் தொடர்பான பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவ ந்தார். மேற்படி பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியிலேயே அவை தலைவர் மேற்படி உத்தரவை பி றப்பித்திருக்கின்றார். மேற்படிப்

பிரேரணை தொடர்பாக சபையில் மேலும் பேசப்படுகையில், மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மே ற்படி சிறுவர் இல்லத்தில் தற்போது பாரிய பிரச்சினைகள் நடந்து வருகின்றது. எனவும் அந்த சிறுவர் இ ல்லத்தில் 366 சிறுவர்கள் தங்கியிருக்கும் நிலையில் தற்போது சிறுவர் இல்லத்தை தலமைதாங்கி வருபவ ர் இந்த மாதம் 14ம் திகதி வரை

யிலேயே சிறுவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய நிலை இருப்பதாக தமக்கு கூறியுள்ளார் என கூறின hர். இதனை தொடர்ந்து பேசிய அவை தலைவர் மாகாண உள்ளக கணக்காய்வு பகுதியினரையும், மா காண சிறுவர் நன்னடத்தை அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் அமைச்சு ஆகியவற்றையும் இணைத்து குழு ஒன்றை உரு

வாக்கி அங்கு என்ன நடக்கிறது என்பதை விசாரணை நடத்தி அறிக்கையை முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரனுக்கு சமர்பித்து முதலமைச்சர் ஊடாக சபைக்கு சமர்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு