SuperTopAds

சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம்! 18 வயதானவர் கைது..

ஆசிரியர் - Editor I
சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம்! 18 வயதானவர் கைது..

சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர். 

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞன் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை 

திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.