யாழ்.தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பதுக்கல் அம்பலம்! நள்ளிரவில் பண முதலைகளுக்கு மட்டும் விற்பனையாம், பாவனையாளர் அதிகாரசபை ஆழ்ந்த உறக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பதுக்கல் அம்பலம்! நள்ளிரவில் பண முதலைகளுக்கு மட்டும் விற்பனையாம், பாவனையாளர் அதிகாரசபை ஆழ்ந்த உறக்கம்..

யாழ்.காங்கேசன்துறை வீதி - தாவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தமை அம்பலமான நிலையில், யாழ்.மாவட்டச் செயலர் தலையிட்டு எரிபொருளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை. எனக்கூறி பொதுமக்கள் திருப்பி அனுப்பபட்ட நிலையில் மக்கள் டீசலுக்காக காத்திருந்திருக்கின்றனர். 

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரிசி ஆலை வர்த்தகருக்கு சொந்தமான பல வாகனங்களுக்கு பகிரங்கமாக அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து பொதுமக்கள் நியாயம் கேட்க சென்றிருந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்தவர்கள் சண்டியர்களாக மாறியிருக்கின்றனர். 

இதனால் பொதுமக்கள் கோபமடைந்து தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் குறித்த விடயம் யாழ்.மாவட்டச் செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மாவட்டச் செயலர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டதை தொடர்ந்து பொதுமக்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், 

இதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பகலில் பொதுமக்கள் கேட்டால் டீசல் இல்லை. என பதிலளிக்கப்படுகின்றது. ஆனால் நள்ளிரவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும் பண முதலைகளின் வாகனங்களும், அவர்களுடைய உறவினர்களின் வாகனங்களும் டிசல் கொள்வனவு செய்கின்றன. 

என கூறியதுடன், மக்களுக்கு இல்லாத டீசல் அவர்களுக்கு எப்படி வந்தது? இவ்வாறான விடயங்கள் பாவனையாளர் அதிகாரசபையினருக்கு தொியாதா? அல்லது அவர்களும் நள்ளிரவில் டீசல் பெறுகிறார்களா? என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு