துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சகோதரர்கள்..! பதறவைக்கும் இரட்டை கொலை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியானது...
மன்னார் -நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்றய தினம் காலை இடம்பெற்ற கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிலங்குளம் பகுதியில் கடந்தவாரம் மாட்டுவண்டில் சவாரி ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது இரு தரப்பினருக்கிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த தர்க்கத்துடன் தொடர்புடையவர் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவராவார். அவர் இன்றைய தினம் தனது வீட்டில் இருந்து மாடு கட்டுவதற்கு சென்றிருந்த நிலையில் அவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர் பிரதான வீதிக்கு தப்பி ஓடி பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவருடைய உறவினரான கொலை செய்யப்பட்ட சகோதரர்கள்
நியாயம் கேட்பதற்கு உயிலங்குளத்தை சேர்ந்த யேசுதாசன் றோமியோ (வயது40) யேசுதாஸன் தேவதாஸ் (வயது33) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அவர்களையும் வழிமறித்து பேசிக் கொண்டிருக்கும்போதே,
சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தப்பி ஓடுவதற்கு முயற்சித்தபோதும் துரத்தி துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.