SuperTopAds

நிர்ணய விலையை மீறினால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்! அரிசி வியாபாரிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் கடும் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நிர்ணய விலையை மீறினால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்! அரிசி வியாபாரிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் கடும் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் அரிசிக்கான நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரிக்கை  விடுத்திருக்கின்றார். 

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. 

அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். சில்லறை விற்பனையாளர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அரிசியை அதிக விலைக்கு விற்று எங்களுடைய பாவனையாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கவேண்டாம். 

என கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக காணப்படுகின்றது. அதே நேரத்தில் எதிர்காலங்களில் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின் கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே பொதுமக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியாவசியப் பொருட்களை 

அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்.வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.