SuperTopAds

அயலவர்கள் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துவிட்டு திரும்பிய பெண் மர்மமான முறையில் மரணம்! யாழ்.நெல்லியடி - வதிரியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
அயலவர்கள் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துவிட்டு திரும்பிய பெண் மர்மமான முறையில் மரணம்! யாழ்.நெல்லியடி - வதிரியில் சம்பவம்..

அயலவர்கள் தன்னை தாக்கிவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்த மூதாட்டி ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நெல்லியடி - வதிரி பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வதிரி சந்தியை அண்மித்த பகுதியில் வசித்துவரும் 76 வயதான முதாட்டி ஒருவரே சடலமாக மீட்கபட்டார்.

குறித்த மூதாட்டி அயலவர்கள் இருவர் தன்னைத் தாக்கினர் என்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று நண்பகலுக்கு பின்னர் அந்த மூதாட்டி உயிரிழந்ததாவ  நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மூதாட்டியை தாக்கினர் என்று கூறப்படும் இரு நபர்களையும் 

பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மரண விசாரணையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.