யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் க.மகேஸன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் க.மகேஸன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள நிலையில் பதுக்கல் வியாபாரிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது, 

நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்றல், அதிக விலைக்கு எரிபொருள் விற்றல் தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் 

மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

எனவே தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடும் எனவே அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்ககூடாது.

பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு பொதுமக்கள் உடந்தையாக இருக்கக் கூடாது அவ்வாறு அவர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

குடாநாட்டிற்கு தேவையான எரிபொருளின் அளவு முன்னரை விட அதிக அளவில் கிடைக்கிறது. எனினும் மேலதிகமாக கிடைக்கும் எரிபொருள் எங்கே செல்கின்றது என்பது தெரியவில்லை.

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது பிரச்சினையாக காணப்படுவதாகவும் அதற்குரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு