கச்சதீவு பிரச்சினை 50 வருடங்கள் கடந்த பின் கிளறப்படுவது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்..

ஆசிரியர் - Editor I
கச்சதீவு பிரச்சினை 50 வருடங்கள் கடந்த பின் கிளறப்படுவது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்..

கச்சதீவை இலங்கைக்கு கையளிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி 50 வருடங்கள் கடந்த பின்னர் மீண்டும் அதை இந்தியா கோருவது மிக தவறு, அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். நேற்றய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

கச்சதீவை இந்தியா முழுமையாக பெற வேண்டும் என்ற கோஷம் இந்தியாவில் பெருவாரியாக எழுந்துள்ளது. கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுப்பதன் மூலம் வடக்கு மீனவர்களின் நிலை இன்னும் மோசமடையும்.

இப்பொழுதே இந்திய மீனவர்கள் மன்னார் கடற்கரை மற்றும் பருத்தித்துறை கடற்கரை வரை வந்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு எங்களுடைய வளங்களை இல்லாது செய்யும் நிலையை அன்றாடம் காண்கிறோம். 

ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. இந்திய பிரதமர் இந்திரா - ஸ்ரீமாவோ இடையில் 

கச்சதீவை இலங்கைக்கு கையளிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 50 வருடங்களுக்கு மேலாக கச்சதீவு இலங்கையின் கீழ் இருந்து வருகின்றது. ஆகவே மீண்டும் இந்த பிரச்சினை கிளறப்படுவதை காண்கிறோம். 

20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது அதனுடைய பிரதிகள் வந்திருக்கின்றன. முதலாவதாக ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியிடமிருந்து தான் ஆளுநர்களுக்கு அதிகாரம் வருகின்றது.

அவருடைய அதிகாரம் குறைக்கப்படுகின்றது. நிச்சயமாக ஆளுநரினுடைய அதிகாரங்களும் குறைக்கப்பட வேண்டும். ஆளுநர் என்பவர் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளுநராக இருக்க முடியாது. 

இந்த விடயங்களை உள்ளடக்காமல் நாங்கள் ஆதரிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயம் சிலர் இதனை அரசாங்கத்திற்கு ஆதரிக்கின்றார்கள் சிலர் இதனை எதிர்க்கிறார்கள். 

சிலர் 13ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் என கூறுகின்றார்கள். சிலர் தேர்தல் முறையை இல்லாது செய்ய வேண்டும் அதாவது இப்போது இருக்கின்ற முறைக்குப் பதிலாக தொகுதிவாரி முறையை அமுல்படுத்த வேண்டும்என கூறுகிறார்கள் . 

குறிப்பாக தமிழ் மக்களை பாதுகாக்ககூடிய விடயங்களை உள்ளடக்க வேண்டும். கட்சியில் இருந்து சில விடயங்கள் சொல்லப்படுகின்றன. அவர்கள் தமிழர்களுக்கு ஒரு நிச்சயமான நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைத்து வரபை உருவாக்க மாட்டார்கள். 

ஆகவே காத்திருந்து பார்த்துதான் குறித்த வரைபிற்கு ஆதரவளிப்பதாக இல்லையா என்பதை கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு