பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு: எனைய 6 பேருக்கும் பொருந்தும்!! -சுட்டிக்காட்டும் நீதிபதி-

ஆசிரியர் - Editor II
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு: எனைய 6 பேருக்கும் பொருந்தும்!! -சுட்டிக்காட்டும் நீதிபதி-

பேரறிவாளனை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவருடன் முன்னாள் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ரொபேர்ட்ஸ் பயஸ், சாந்தன் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும்.

இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸ் ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வௌ;வேறு தீர்ப்பை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செய்தியிலேயே மேற்படி விடத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் இருந்த காலப்பகுதியில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட பின்னர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தோமஸூக்கு பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வௌ;வேறு தீர்ப்பை வழங்க முடியாது. இவர்களை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அப்படி நடக்காததால் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் சரியான தீர்ப்பளித்துள்ளது எனவும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.டி. தோமஸ் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு