60:40 அடிப்படையில் ஆசனப்பங்கீடு - கூட்டமைப்புக்குள் இணக்கம்!

ஆசிரியர் - Admin
60:40 அடிப்படையில் ஆசனப்பங்கீடு - கூட்டமைப்புக்குள் இணக்கம்!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது என்­றும் ஏனைய இரு கட்­சி­க­ளும் எஞ்­சிய 40 வீதத்­தைப் பங்­கி­டு­வ­தும் என்­றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. இது தொடர்­பான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டு­வ­து என்­றும் மூன்று கட்­சி­க­ளும் உடன்­பட்­டன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நேற்று கூடி உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டின. அதில் 60:40 என்ற இணக்­க­பாடு எட்­டப்­பட்­டது.

தேர்­த­லில் வென்ற பின்­னரே தவி­சா­ள­ரைத் தீர்­மா­னிப்­பது என்­று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. தவி­சா­ளர் நிறுத்­தப்­ப­டும் கட்சி சார்­பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றும் வேட்­பா­ளர்­க­ளின் சத­வீ­தம் 60 ஆக இல்­லா­விட்­டால் விகி­தா­சார அடிப்­ப­டை­யில் கிடைக்­கும் நிய­மன ஆச­னங்­களைத் தவி­சா­ளர் தெரி­வா­கும் கட்­சிக்கு வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

தவி­சா­ளர் ஒரு கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால் மற்­றைய கட்­சிக்கு உப தவி­சா­ளர் பதவி வழங்­கப்­ப­டும். ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் வெற்­றிக்கு மூன்று கட்­சி­க­ளுமே இணைந்து பாடு­ப­டு­வது என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத்­தின் தவி­சா­ளர் ஒரு கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தால் அவ­ருக்கு எதி­ராக ஏனைய கட்­சி­கள் இணைந்து செயற்­பட்­டன. அத­னால் வரவு – செல­வுத் திட்­டங்­கள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­து­டன், உள்­ளூ­ராட்சி மன்­றமே கலைக்­கப்­பட்ட பல குழப்­பங்­கள் நடந்­தி­ருந்­தன. அந்­தப் படிப்­பி­னை­யின் அடிப்­ப­டை­யி­லேயே 60:40 என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது என்று அறி­ய­மு­டி­கின்­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு